\
இந்திய இளைஞரை சீன ராணுவத்தினர் கடத்தியதாக புகார்

இந்திய இளைஞரை சீன ராணுவத்தினர் கடத்தியதாக புகார்

இந்திய இளைஞரை சீன ராணுவத்தினர் கடத்தியதாக புகார்
Published on

அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து இந்திய இளைஞர் ஒருவரை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றனர்.

அருணாச்சலப்பிரதேசத்தில் சாங்போ ஆறு பிரவேசிக்கும் இடத்தில் உள்ள சியாங் மாவட்டத்திற்குள் நுழைந்த சீனப் படையினர், 17 வயது இளைஞரை கடத்திச் சென்றுவிட்டதாக, தபிர் கவ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்தியப் பகுதிக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் அளவுக்கு சீனா அமைத்திருக்கும் சாலைக்குள் நுழைந்து கடத்தல் நடைபெற்றதாகவும் அவர் கூறியிருக்கிறார். இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக எம்பி தபிர் கவ் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com