காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி 

காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி 
காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் - சீனா முயற்சி தோல்வி 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான்-சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ஏஎன்ஐ தகவல் தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை நடைபெற்றது. பாகிஸ்தான், சீனாவின் வலியுறுத்தலை அடுத்து பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாத தலைவரான போலந்தின் ஜோன்னா ரொனெக்கா தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் - சீனாவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன.

ஏற்கனவே 1965ல் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசித்த நிலையில் மீண்டும் ஐ.நா. ஆலோசனை செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com