இந்தியா
மரங்களுக்கு ராக்கி கயிறுகளைக் கட்டிய குழந்தைகள்
மரங்களுக்கு ராக்கி கயிறுகளைக் கட்டிய குழந்தைகள்
ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் மரங்களுக்கு ராக்கிக் கயிறுகளைக் கட்டி விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
நாட்டு மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க உறுதிமொழி ஏற்கும் விதமாக குழந்தைகள் மரங்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மரங்களைக் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியறுத்தும் வகையில், மரங்களுக்கு ராக்கிக் கயிறுகளைக் கட்டியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.