108 ஆம்புலன்சில் ஜனனித்த 4,360 குழந்தைகள்!

108 ஆம்புலன்சில் ஜனனித்த 4,360 குழந்தைகள்!

108 ஆம்புலன்சில் ஜனனித்த 4,360 குழந்தைகள்!
Published on

கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4,360 குழந்தைகள் 108 ஆம்புலன்சில் இருந்து தங்களது வாழ்க்கையை துவங்கியுள்ளனர்.

வாழ்க்கையை தொடர சிலருக்கு ஆம்புலன்ஸ் உதவுகிறது. ஆனால் சிலருக்கோ 108 ஆம்புலன்சில் இருந்து தான் வாழ்க்கை துவங்குகிறது. ஆம். கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4360 குழந்தைகள் 108 ஆம்புலன்சில் பிறந்துள்ளன. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 1955 குழந்தைகளும், 2016-17-ஆம் ஆண்டில் 2405 குழந்தைகளும் ஆம்புலன்சில் பிறந்துள்ளன.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "அவசர கால இறப்பு விகிதத்தை குறைக்கும் பொருட்டு கடந்த 2008-ஆம் ஆண்டு மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. கர்நாடகாவில் பெரும்பாலான கிராமப் புற பகுதியை சேர்ந்த மக்கள், மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலே தான் தங்கள் குழந்தையை பெற்று வந்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னால், அதனை பிரசவ காலத்தில் பெண்கள் பயன்படுத்த தொடங்கினர். இருப்பினும் மருத்துவமனை செல்வதற்குள் பாதி வழியிலேயே பலருக்கு குழந்தை பிறந்திருக்கிறது" என்றார். ஆம்புலன்சில் நன்கு பயிற்சி பெற்ற செவிலியர்கள் பணியில் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com