இந்தியா
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய சிறுவர்கள் - பீகாரில் பரபரப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய சிறுவர்கள் - பீகாரில் பரபரப்பு
பீகாரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும் களமிறங்கினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பாட்னாவில் மெகா கூட்டணி என்ற பெயரில் ராஷ்டிரிய ஜனதா தள சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நடந்த போராட்டத்தில் சிறுவர்களும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு இடையே சிறுவர்களும் சாலையில் அமர்ந்து போராடியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.