தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் - கேரளாவில் பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்

தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் - கேரளாவில் பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் - கேரளாவில் பரவும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலுடன் தோலில் சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டு எரிச்சல், காய்ச்சல், வலியைத் தரும் பாதிப்பு தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் இந்த காய்ச்சலால், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பல்வேறு பகுதிகளிலும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த காய்ச்சலால் தமிழக மக்கள் பீதியடையவேண்டாம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com