"3வது மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கைக்குழந்தை.."
ஐதராபாத் நகரில் கைக்குழந்தை ஒன்று 3வது மாடியிலிருந்து தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஐதராபாத்தில் கடந்த 11ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிருக்கின்றன. இந்த சிசிடிவி காட்சியில், குழந்தை ஒன்று 3வது மாடியிலிருந்து கீழே விழ்கிறது. இதனைக்கண்டு பதறிய பாதசாரி ஒருவர் குழந்தையை அதிர்ச்சியுடன் தூக்குவது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. இதனைத்தொடர்ந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை பகதூர்புரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. 3வது மாடியிலிருந்து குழந்தை தூக்கி எறியப்பட்டதால் குழந்தை பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கைக்குழந்தை என்பதால் அதுவாக ஜன்னலில் ஏறி விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், வேண்டுமென்றே யாரோ அந்த குழந்தையை தூக்கிப்போட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.