\
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்
Published on

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விளையாடும் போது ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தான். தற்போது 15 அடியில் சிக்கி இருக்கும் சிறுவனை மீட்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குழந்தைக்கு தேவையான தண்ணீரும், காற்றும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தையை மீட்க பேரிடம் மீட்புப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தேவையான மருந்து உபகரணங்களுடன் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

விரைவில் சிறுவன் உயிருடன் மீட்கப்படும் என காவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு குடிநீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com