காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை 

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை 
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை 

நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மையை பிடித்து பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்பதாக கூறி அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவிப்பு வெளியிட்டு ராஜினாமா கடிதத்தையும் வழங்கியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் முதல்வர்கள் தலைவர்கள் ராகுல்காந்தியை தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நாங்கள் வேண்டுமானால் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறோம். ஆனால் நீங்கள் ஒருவர் பதவி விலகுவதால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமே தவிர எந்த மாற்றமும் நிகழாது என தெரிவித்து வருகின்றனர். 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் புதுசேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com