பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி பிரதமர் மோடி அவருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றார். மேலும் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து "அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல, உணர்வுகளில் கலந்தது" என்று உணர்ச்சி பொங்க தனது ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

மேலும் பிரதமரின் தாயாருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஹீராபென்னுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தங்களின் தாயார் 100வது வயதில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், தாயார் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை நன்கு அறிவேன், தாங்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் என் தாயாரின் உடல்நலனை விசாரித்ததை அன்புடன் நினைவு கூர்கிறேன். சிறப்பான இந்நன்நாளில் தங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com