supreme court, cji d y chandrachudpt web
இந்தியா
“நீதிபதி இடத்தில் அமர்ந்து பார்த்தால்தான் எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பது புரியும்” - சந்திரசூட்
“நீதிபதிகளுக்கு எவ்வளவு அழுத்தம், பணிச்சுமை இருக்கிறது என்பதை எங்கள் இடத்தில் அமர்ந்து பார்த்தால்தான் தெரியும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், தனது வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தபோது, வழக்கறிஞர் மீண்டும் அதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினார்.
supreme courtpt desk
இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஒருநாள் நீதிபதி இடத்தில் அமர்ந்து பாருங்கள். அப்போதுதான் எவ்வளவு பணிச்சுமை, அழுத்தம் இருக்கிறது என்பது புரியும்” என காட்டமாக கூறினார்.
மேலும், “வழக்கை எப்போது பட்டியலிட வேண்டும் என்று தேவையில்லாத அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்காதீர்கள்” எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.