உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் !

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் !

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் !
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பர் ரஞ்சன் கோகாய். இவர் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேள்விகளும் அனுப்பப்பட்டன. இதனிடையே உச்சநீதிமன்றத்தின் செயலாளர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான புகார் என கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த விவகாரத்தில் யாரோ பின்இருந்து இயக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்ற இரண்டே மாதத்தில் தான் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் அப்பெண் புகார் கூறியுள்ளார். டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு, அனுமதி இல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்ததே  காரணம்  என சொல்லப்பட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்தில் உள்ள கணவர் மற்றும் மைத்துனரும் கூட போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com