இந்தியா
டெல்லி சட்டசபைத் தேர்தல் : பிப். 8ஆம் தேதி வாக்குப் பதிவு
டெல்லி சட்டசபைத் தேர்தல் : பிப். 8ஆம் தேதி வாக்குப் பதிவு
டெல்லி மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 (1,46,92,136) வாக்காளர்கள் உள்ளனர். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 13,750 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன” என்றார்.
முக்கிய தேதிகள்:
- வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் தேதி: ஜன 14
- வேட்புமனு முடிவடையும் நாள் : ஜன. 21
- வேட்புமனு பரிசீலனை : ஜன. 22
- வேட்புமனு திரும்பப் பெற கடைசிநாள் : ஜன. 24
- வாக்குப்பதிவு : பிப்ரவரி 8
- வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 11