தலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

தலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து
தலைமைத் தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று
நடைபெறவிருந்த ‌அதிகாரிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

543‌ தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளு‌மன்றத்தின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாகத் நடந்து முடிந்துள்ளது‌. இதில் முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களிதனர். இதனைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. இதற்காக ஏற்பாடுகள் தீவரம் அடைந்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதாக இருந்தது.

மேலும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்துவதாக இருந்தார். காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com