தேர்தல் ஆணையத்தில் மோதலா? சுனில் அரோரா விளக்கம்!
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் இருப்பது வழக்கம். அதன்படி தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள் மூன்று பேரும் கூடி எடுப்பது வழக்கம்.
(சுனில் அரோரா)
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா புகார் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தான் இனி பங்கேற்கப்போவதில்லை எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, அவர் கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அசோக் லவாசா எழுதியுள்ள கடிதத்தில், ''மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறைகளை மீறினர். அவர்கள் மீதான 6 புகார்க ளில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. அதனால் இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை'' என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
(அசோக் லவாசா)
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தில் கருத்து மோத ல் என்ற சர்ச்சை தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் தேர்தல் ஆணையத்துக்குள் இதுபோன்ற கருத்து முரண்பாடு கள் ஏற்பட்டிருப்பதாகவும் முக்கிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் ஒரே மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற எந்த அவசிய மும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.