\
"ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தத் தயார்" - தலைமை தேர்தல் ஆணையர்

"ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தத் தயார்" - தலைமை தேர்தல் ஆணையர்

"ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தத் தயார்" - தலைமை தேர்தல் ஆணையர்
Published on: 

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். வாராணாசியில் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பயிற்சிக்காக கொண்டுவரப்பட்டவை என்றும் வாக்குப்பதிவின்போது இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில் மாற்று இயந்திரங்களாக அவை பயன்படுத்த வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறிய சுஷில் சந்திரா, 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 2,270 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com