பிறந்தநாளன்று சிறையில் இருக்க போகும் ப.சிதம்பரம்

பிறந்தநாளன்று சிறையில் இருக்க போகும் ப.சிதம்பரம்

பிறந்தநாளன்று சிறையில் இருக்க போகும் ப.சிதம்பரம்
Published on

ப.சிதம்பரம் தனது 74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைப்பதற்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திகார் சிறைக்கு கொண்டு செல்லப்படும் ப.சிதம்பரம் ஏழாம் எண் கொண்ட அறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதே அறையில்தான் சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் அடைக்கப்பட்டிருந்தார். 

சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது 74-வது பிறந்தநாளை சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்துக்கு வருகிற 16 ஆம் தேதி 74-வது பிறந்தநாளாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com