சட்டீஸ்கர் | 11 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட க்ளோன் எருமை.. கிளம்பிய சந்தேகம்!
சத்தீஸ்கரில் 11 ஆண்டுகளுக்கு முன் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட தீபாஷா என்ற காட்டெருமை குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. 2009-ஆம் ஆண்டு தீபாஷா என்ற க்ளோனிங் எருமையை உருவாக்கியதாக வனத்துறை அறிவித்தது. HAND GUIDE க்ளோனிங் எனும் தொழில்நுட்பம் மூலம் அந்த க்ளோன் காட்டெருமை உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த எருமை உள்ளூரை சேர்ந்த முர்ரா வகை எருமையை போன்று உள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு ஆர்வலர்கள் சில சந்தேகங்கனை எழுப்பினர்.
குளோனிங்கிற்கான கருப்பைகள் இறைச்சிக்கூடத்தில் இருந்து பெறப்பட்டால், காட்டு எருமையின் குளோனிங்கை உருவாக்குவது சாத்தியமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு சாத்தியமில்லை என்ற பதில் அரசு தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் அழிந்து வரும் காட்டு இனங்கனை பாதுகாக்கும் நோக்கில் இந்த க்ளோனிங் திட்டம் கையிலெடுக்கப்பட்டது. ஆனால் பல கோடிகள் செலவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.