அரசு வேலைக்காக தனது தந்தையை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாபீர் சாய். இவரது மகன் ஜீவன் சாய்(28). இவர் வேலையில்லாமல் இருந்ததால் இவரை பலர் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய தந்தை சன்னா கிராமத்திலுள்ள அரசு சுகாதார மையத்தில் பணியாற்றி வந்தார். ஆகவே தந்தையை கொலை செய்து அவருடைய அரசு வேலையை பெற ஜீவன் சாய் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை மகாபீர் சாய் தலையில் காயங்களுடன் மர்மான முறையில் காட்டுக்குள் சடலமாக கண்டெக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜீவா சாய் தனது தந்தையை அரசு வேலைக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் இந்தக் கொலைக்கு அவருக்கு உறுதுணையாக இருந்த மற்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.