\
மின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் !

மின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் !

மின்சார வசதி இல்லை, ஆனால் கரண்ட் பில் !
Published on

மின்சார வசதி இல்லாமலேயே ஒரு கிராம பகுதிக்கு மின்சார கட்டண ரசீது அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மின்சார வசதியே இல்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளக்கு வெளிச்சத்தில் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர், “எங்கள் பகுதியில் இதுவரை மின்சார வசதியே இல்லை. நாங்கள் எப்போதும் இருளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியிலுள்ள குழந்தைகளை விளக்கு வெளிச்சத்தை வைத்து பாடம் படிக்கின்றனர். இவ்வாறு மின்சார வசதியே இல்லாத பகுதிக்கு அரசு மின்சார கட்டண ரசீது எவ்வாறு வழங்கியுள்ளது என்பது புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“இந்தச் சம்பவத்தை நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு விட்டுள்ளேன். விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com