சத்தீஸ்கர்: காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ரகளை - தள்ளுமுள்ளு

சத்தீஸ்கர்: காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ரகளை - தள்ளுமுள்ளு
சத்தீஸ்கர்: காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ரகளை - தள்ளுமுள்ளு

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் இன்று  நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்  மாநாட்டில் மோதல் உருவானது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பவன் அகர்வால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோவைப் பற்றி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இப்திகார் ஹசன் உடனடியாக மேடையில் ஏறி பவன் அகர்வாலை கீழே தள்ளிவிட்டார், அதைத் தொடர்ந்து கூட்டத்தில் சண்டை அதிகமானது.

இந்த கூட்டத்தில் பவன் அகர்வால் பேசுகையில், "டிஎஸ் சிங் தியோ முதல்வராக ஆவதற்கு 2.5 ஆண்டுகள் காத்திருந்தார், இப்போது பூபேஷ் பாகேல் தனது இடத்தைக் காலி செய்ய வேண்டும். இங்கு காங்கிரஸ் ஆட்சி இல்லாதபோது, தியோவும் பாகேலும் இணைந்து பணியாற்றினர். அவர்களால்தான் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது.என்று கூறியதால் இந்த சண்டை உருவானது என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com