சத்தீஸ்கரில் உளவுத்துறையின் தோல்வி இல்லையா? - ராகுல் சரமாரி கேள்வி

சத்தீஸ்கரில் உளவுத்துறையின் தோல்வி இல்லையா? - ராகுல் சரமாரி கேள்வி

சத்தீஸ்கரில் உளவுத்துறையின் தோல்வி இல்லையா? - ராகுல் சரமாரி கேள்வி

சத்தீஸ்கரில் நக்சலுக்கு எதிரான சண்டை மிக மோசமான முறையில் முன்னெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சனிக்கிழமை நக்சலுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின்போது, 22 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, எவ்வித திட்டமிடலும் இல்லாமல், மிக மோசமாக செயல்படுத்தப்பட்ட திட்டம். இது உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், நக்சலுக்கு நிகரான எண்ணிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டது எப்படி?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

"21 ஆம் நூற்றாண்டில் எந்தவொரு ராணுவ வீரரும் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ள முடியாது. ஆதலால் இந்த உடல் கவசம் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கிடைக்க வேண்டும்” என்று மற்றுமொரு ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார் 

முன்னதாக நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக பிஜாப்பூர் எஸ்.பி. கமலோச்சன் காஷ்யப் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com