\
சத்தீஸ்கர்: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 4 கொரோனா நோயாளிகள் மரணம்

சத்தீஸ்கர்: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 4 கொரோனா நோயாளிகள் மரணம்

சத்தீஸ்கர்: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 4 கொரோனா நோயாளிகள் மரணம்
Published on

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் மாவட்டத்திலுள்ள டோங்கர்கான் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த நபர்களில் 3 பேர் கோவிட்-19 பராமரிப்பு மையத்தில் இறந்தனர், மற்றொரு நபர் சமூக சுகாதார மையத்தில் இறந்தார். உயிரிழந்த இவர்களை  அடக்கம் செய்வதற்கு குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்துசெல்லப்பட்டதும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் 7 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com