சென்னை -மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை -மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை -மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து
Published on

சென்னை- மங்களூரு விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மங்களூரு இடையே தினமும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து நேற்று புற்றப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. கேரள மாநிலம் சோரனூர் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். 


இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து உயரதிகாரிகள் சம்பவ இடத் துக்கு விரைந்துள்ளனர். தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வரும் மற்ற ரயில்கள் தாம தாக செல்லும் என தெரிகிறது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com