செங்கல்பட்டை சேர்ந்தவர் குவைத்தில் உயிரிழப்பு - உடலை கொண்டு வரக்கோரி எம்.பி. கடிதம்

செங்கல்பட்டை சேர்ந்தவர் குவைத்தில் உயிரிழப்பு - உடலை கொண்டு வரக்கோரி எம்.பி. கடிதம்

செங்கல்பட்டை சேர்ந்தவர் குவைத்தில் உயிரிழப்பு - உடலை கொண்டு வரக்கோரி எம்.பி. கடிதம்
Published on

குவைத்தில் உயிரிழந்த செங்கல்பட்டை சேர்ந்தவரின் உடலை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி வில்சன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தில், குவைத்தில் பணியாற்றி வந்த செங்கல்பட்டை சேர்ந்த 56 வயதான பாண்டியன் சம்பந்தன் என்பவர் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்தின் வேதனை ஒருபுறம் இருக்க, இறுதிச்சடங்கு செய்ய இயலாது தற்போது தவித்து வரும் அவரது குடும்பத்தினரின் நிலையை அறிந்து, உடலை அவரது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு கொண்டு வரும் வகையில் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com