சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு: எந்திரன் ஸ்டைலில் ஒரு மோசடி!

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு: எந்திரன் ஸ்டைலில் ஒரு மோசடி!
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு: எந்திரன் ஸ்டைலில் ஒரு மோசடி!

ரயில்வே தேர்வில் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியை சேர்ந்தவர் தீபக் ஜோஷி (30). மும்பைக்கு வேலை தேடிவந்தார். கம்பெனி கம்பெனியாக அலைந்தும் வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே ரயில்வே போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். எழுத்துத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதற்காக அவர் எந்த பயிற்சியும் பெறவில்லை. அவருக்கு அவரது நண்பர் ஆதரவு கொடுக்க முன் வந்தார். அதாவது, எந்திரன் படத்தில் எம்.பி.பி.எஸ் தேர்வு எழுதும் ஐஸ்வர்யா ராய்க்கு, சிட்டி ரஜினி புளூ டூத் மூலம் விடைகளை சொல்வார் இல்லையா? அதே பார்முலாவை பின்பற்றத் தொடங்கினார் நண்பர். புளூ டூத்துக்குப் பதில் இவர், இயர்ஃபோன் பயன்படுத்த முடிவு செய்தார்.

தேர்வு எழுதும் மையத்துக்குச் சென்ற தீபக் ஜோஷி, புல் சர்ட் அணிந்திருந்தார். காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு அதை மறைக்கும் விதமாக குல்லா அணிந்துக்கொண்டார். சட்டைக்குள் சென்ற இயர்ஃபோன் வயர் வெளியில் தெரியாதவாறு பார்த்துக்கொண்டார். கேள்வித்தாள் வந்ததும் நல்ல பிள்ளை ஸ்டைலில் எழுதுவது போல் பாசாங்கு செய்தார். பிறகு இயர்ஃபோனில் மெதுவாக கேள்விகளைச் சொல்ல, அங்கிருந்து வந்திருக்கிறது பதில்.

அமைதியான ஹாலில் இவர் அருகில் மட்டும் ஏதோ சத்தம் வருகிறதே என அங்கிருந்த தேர்வு அதிகாரிக்கு சந்தேகம். இரண்டு மூன்று முறை செக் பண்ணினார். ஆமாம், ஜோஷியின் வாய் அசைந்துகொண்டிருந்தது. போய் அருகில் நின்றதும், பேச்சு நின்றது ஜோஷிக்கு. என்னய்யா சத்தம் என்று அவர் கேட்க, இயர்ஃபோன் மேட்டர் வெளியே வந்திருக்கிறது. பிறகென்ன, அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைக்கக் கொண்டு சென்றனர். ஆனால், எஸ்கேப் ஆகிவிட்டார் ஜோஷி. போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர், இந்த இளைஞரை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com