பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்குப் பதிவு

பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்குப் பதிவு
பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்குப் பதிவு

தேர்தல் பிரசார வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இவரது ஐபேக் நிறுவனம், காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் பணியாற்றியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக்குவதற்கு இந்த நிறுவனம் பணியாற்றியது.

அதேபோல், பீகாரில் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. கடைசியாக ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. இதில், ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் ஜெகன் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆட்சியையும் மாநிலத்தில் பிடித்தது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துத்தர கைகோர்த்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

இதனிடையே ஜனவரி 29 தேதி அன்று பிரசாந்த் கிஷோர் ஜே.டி.யு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து முதன் முதலில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், முதல்வர் நிதிஷ்குமாரை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நிதீஷுடன் கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன எனவும் இருப்பினும் பீகாருக்கு ஒரு வலுவான தலைவர் தேவை எனவும் தெரிவித்தார்.

பீகார் அரசியலில் இனி கவனம் செலுத்த போவதாகவும், “பாத் பீகார் கி” எனப்படும் “பீகார் குறித்து பேசுவோம்” என்ற இயக்கத்தை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் பீகாரை முன்னோக்கி அழைத்துச் செல்ல நினைக்கும் அத்தனை இளைஞர்களையும் இணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரிடம் கேட்ட போது, “பீகாரைத் தவிர வேறு எங்கும் செல்லப்போவதில்லை. நான் ஒவ்வொரு நாளும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் பீகாரில் நிகழ்ச்சியைத் தொடங்குவேன்” எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், ஷஷாவத் கவுதம் என்பவர் பாடலிபுத்ரா காவல் நிலையத்தில், “தன்னுடைய பீகார் குறித்து பேசுவோம்” என்ற திட்டத்தை, பிரசாந்த் கிஷோர் திருடிவிட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்

இது தொடர்பான விசாரணையில் கவுதமிடம் வேலை செய்த ஒசாமா என்ற இளைஞர், பிரசாந்த் கிஷோரிடம் "பீகார் குறித்து பேசுவோம்" என்ற திட்டத்தின் முக்கிய ஆவணங்களை ஒப்படைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com