\
56 வயது பெண் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

56 வயது பெண் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

56 வயது பெண் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது
Published on

சத்தீஸ்கரில் மனநலம் பாதித்த 56 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இரும்புக் கம்பியால் சித்திரவதை செய்து கொலை செய்த 31 வயதான வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். சாலை விபத்தில் மரணம் நிகழ்ந்திருக்கும் என போலீசார் எதிர்பார்த்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. இறந்த பெண்ணுக்கு 56 வயதுக்குள் இருக்கலாம் என்றும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு, அவரது தலையில் பாறாங்கல் கொண்டு நசுக்கி கொல்லப்பட்டுள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் சில வருடங்களுக்கு முன்பு பெற்றோரை இழந்ததால், உள்ளூர்வாசிகள் எதைக் கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்தது. அதே பகுதியில் வசிக்கும் 31 வயதான கிஷன் யாதவ் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் சண்டையிட்டு கிஷன் யாதவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யாதவ் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் வயிற்றில் எட்டி உதைத்து, கண்களில் சரமாரியாக குத்தி, இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.பின் அவரது தலையை பாறாங்கல் கொண்டு நசுக்கி கொன்றுள்ளார். அந்த பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்துசெல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தற்போது கிஷன் யாதவ் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com