CHAT GPT, DEEP SEEKfacebook
இந்தியா
CHAT GPT, DEEPSEEK செயலிகளை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது!
உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என்பதால், இந்த நடவடிக்கையை நிதித்துறை எடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயலிகளான சாட் ஜி.பி.டி. மற்றும் டீப் சீக் செயலிகளை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என்பதால், இந்த நடவடிக்கையை நிதித்துறை எடுத்துள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த செயலிகளை அரசு அதிகாரிகள் பயன்டுத்தக்கூடாது என அறிவித்துள்ளன. அதனை பின்தொடர்ந்து தற்போது இந்தியாவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை தெரிவித்துள்ளது-