பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு
Published on

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புதிய முதல்வரை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

பல்வேறு பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமரிந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் சரண்ஜித் சிங் சன்னி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com