\
இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்களா..? காரணம் கேட்கிறது அரசு..!

இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்களா..? காரணம் கேட்கிறது அரசு..!

இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்களா..? காரணம் கேட்கிறது அரசு..!
Published on: 

இந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.

வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பல ஆண்டுகளாக தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்துவிடுகிறது. அவ்வாறு வெளிநாடு செல்லும் இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டுவிடுகின்றனர்.

இந்நிலையில் இந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது என்ன காரணத்திற்காக இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்கள்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டு குடியுரிமை பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் புதிய விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ன. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு அவர்களின் வெளிநாட்டு குடியுரிமை தடுப்பதற்காக அல்ல என்றும், என்ன காரணத்திற்காக அவர்கள் இந்திய குடியுரிமையை தவிர்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com