3 நாட்களில் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறும் நடைமுறை இன்று அமல்

3 நாட்களில் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறும் நடைமுறை இன்று அமல்
3 நாட்களில் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறும் நடைமுறை இன்று அமல்

செல்போன் எண்ணை மாற்றாமலே வேறு ஒரு நிறுவனத்திற்கு 3 நாட்களில் மாறிவிடும் புதிய நடைமுறை ‌இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்கள் வேறு ஒரு தொலைபேசி நிறுவனத்திற்கு மாறும் போர்ட்டபிளிட்டி வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பயன்படுத்தி வரும் எண்ணை மாற்றாமலேயே, வேறு நெட் ஒர்க்கிற்கு மாற இதற்கு முன் 15 நாட்கள் ஆன நிலையில், தற்போது அது 3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய நடைமுறை, நாடு முழுவதும் ‌இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விரும்பும் நெட் ஒர்க்கிற்கு மாற ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு சேவை நிறுவன எண்ணை 9‌0 நாட்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். போஸ்ட்பெய்டு எண் என்றால், முந்தைய நிலுவைத் தொகையை முழுமையாக கட்டி முடித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் விரும்பிய நெட்ஒர்க்கை தேர்வு செய்து, Port எ‌ன டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com