நிலவைச் சுற்றத்தொடங்கிய சந்திரயான்2

நிலவைச் சுற்றத்தொடங்கிய சந்திரயான்2
நிலவைச் சுற்றத்தொடங்கிய சந்திரயான்2

புவியின் வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையை சந்திரயான்2 சுற்றத்தொடங்கியது

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பப்பட்டது சந்திரயான் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திரயான் 2, முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது.

அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணித்தைத் தொடங்கியது. இந்தப் பயணம் இன்று காலை 9:30 மணியோடு நிறைவடைந்தது. அதன்படி புவியின் வட்டப்பாதையில் சுற்றிவந்த சந்திரயான் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அதன்படி ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயானின் பாதை திருத்தியமைக்கப்படும். செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு நிலவைக் குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர், அதிகபட்சம் 128 கிலோ மீட்டர் என்கிற தூரத்தில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து நிலவின் தரைப் பகுதியை நோக்கிப் பயணிக்கும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com