கொரோனாவால் தாமதமான சந்திரயான்-3, 2022 இல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் கே சிவன்

கொரோனாவால் தாமதமான சந்திரயான்-3, 2022 இல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் கே சிவன்
கொரோனாவால் தாமதமான சந்திரயான்-3, 2022 இல் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் கே சிவன்

கோவிட் -19 பொதுமுடக்கத்தால் பல இஸ்ரோ திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் சந்திரயன் -3 மற்றும் ககன்யான் ஆகியவை அடங்கும். இதனால் சந்திரயான்-3 இன் பயணம் 2022 இல் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து நிலவுக்கான மூன்றாவது பயணமான சந்திரயன் -3, 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். கோவிட் -19 பொதுமுடக்கத்தால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பல திட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2020 இன் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் -3 மற்றும் நாட்டின் முதல் மனிதர்கள் கொண்ட விண்வெளிப் பயணமான ககன்யான் போன்ற திட்டங்கள் இதனால் தாமதமாகிறது. "நாங்கள் இத்திட்டத்தில் பணியாற்றுகிறோம். இது சந்திரயான் -2 போன்ற அதே உள்ளமைவு கொண்டது, ஆனால் இதற்கு ஒரு சுற்றுப்பாதை இருக்காது. சந்திரயான் -2 க்காக தொடங்கப்பட்ட சுற்றுப்பாதை சந்திரயான் -3 க்கும் பயன்படுத்தப்படும். இத்திட்டம் பெரும்பாலும் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும்என்று கே.சிவன் தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்தில் ரோவரை தரையிறக்கும் நோக்கில் சந்திரயான் -2, ஜூலை 22, 2019 அன்று ஏவப்பட்டது. இருப்பினும், லேண்டர் விக்ரம் 2019, செப்டம்பர் 7 ஆம் தேதி உடைந்து நொறுங்கியது. இதனால் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இறங்கிய முதல் நாடு என்ற இந்தியாவின் கனவு நொறுங்கியது.

சந்திரயான் -3 இஸ்ரோவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது மேலும் பல கிரகங்களுக்கான விண்வெளி பயணங்களுக்கான இந்தியாவின் திறன்களை நிரூபிக்கும். 2022 க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் மூலமாக திட்டமிடப்பட்டது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சோதனை விமானிகள் தற்போது ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com