கட்சி நிதிக்காக கூலி வேலை செய்யப் போவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி உதயமான தினம் வரும் 27-ஆம் தேதி வாராங்கலில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கான நிதியை திரட்டுவதற்காக கட்சி உறுப்பினர்கள் 75 லட்சம் பேர், இரண்டு நாட்கள் கூலி வேலை செய்வதாக அறிவித்துள்ளனர். கட்சி தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ், தானும் இரண்டு நாட்கள் கூலி வேலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.