"இந்தியாவில் இனி மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்" - சந்திரசேகர் ராவ் பேச்சு

இந்தியாவில் வருங்காலங்களில் மாநில கட்சிகளே ஆதிக்கம் செலுத்தும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சந்திரசேகர் ராவ் பேசினார். அப்போது அவர், “பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெலங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை.

telangana election
telangana electiontwitter

பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெலங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது. எனது உயிர் உள்ளவரை தெலங்கானா மதசார்பற்ற கொள்கை அடிப்படையிலான மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்” என தெரிவித்தார்.

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல்? அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு எதிராக நேரு ஆதரவாளர் போர்க்கொடி!

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com