”கொசுக்களால் கடிபடவிட்டே என் தந்தையை கொன்றுவிடுவார்கள்” - சந்திரபாபு நாயுடு மகன் பகீர் குற்றச்சாட்டு

சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக குற்றச்சாட்டு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுPT

தனது தந்தை சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக சிறையில் சதி செய்யப்படுவதாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அவருடைய மகன் நாரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ”ஆதாரம் இல்லாத வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் கிடைக்காமல் ராஜமுந்திரி மத்திய சிறையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர்.”

”இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு சிறையில் வைத்து ஆபத்தை ஏற்படுத்த அரசு திட்டம் தீட்டுகிறது. சந்திரபாபுவுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை. கொசுக்கள் அதிகம் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினாலும் அதை பொருட்படுத்துவதில்லை. சிறையில் ரிமாண்ட் கைதியாக இருந்த ராஜமுந்திரி கிராமிய மண்டலம் தவளேஸ்வரத்தைச் சேர்ந்த கஞ்செட்டி வீரவெங்கட சத்தியநாராயணா டெங்குவால் உயிரிழந்தார். ”

chandrababu naidu
chandrababu naidupt desk

”சந்திரபாபுவுக்கும் இதேபோன்று செய்ய ஜெகன் மோகன் ரெட்டி சூழ்ச்சிகள் செயல்படுத்தி வருகிறார். சந்திரபாபுவுக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெகன் மோகன் தான் பொறுப்பு” எனப் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com