\
ஆந்திரம் என்ன தமிழ்நாடா ? பாஜகவுக்கு நாயுடு எச்சரிக்கை !

ஆந்திரம் என்ன தமிழ்நாடா ? பாஜகவுக்கு நாயுடு எச்சரிக்கை !

ஆந்திரம் என்ன தமிழ்நாடா ? பாஜகவுக்கு நாயுடு எச்சரிக்கை !
Published on: 

தமிழக அரசின் பிடியை வைத்திருப்பது போல், ஆந்திராவையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது, அதை ஒரு போதும் நடக்க விட மாட்டேன் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். தனது பிறந்தநாள் அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்திரா காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்திற்கு "நீதிக்கான போராட்டம்" என பெயரிடப்பட்டது. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையை சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர். இது குறித்து சந்திரபாபு நாயுடு பேசுகையில் " மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதுபோன்றதை எப்போதும் நடக்க விடமாட்டேன். மத்திய அரசுடனான இந்தப் போராட்டம் என் சுயநலம் அல்ல, மாநில நலத்துக்கானது" என்றார் அவர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com