’கல்விச்செலவை ஏற்கிறேன்’:  சோனு சூட் உதவியைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தகவல்!

’கல்விச்செலவை ஏற்கிறேன்’: சோனு சூட் உதவியைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தகவல்!

’கல்விச்செலவை ஏற்கிறேன்’: சோனு சூட் உதவியைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தகவல்!
Published on

ஆந்திராவில் நிலத்தை உழவு செய்வதற்கு தன்  சொந்த மகள்களைக் கட்டாயப்படுத்திய விவசாயிக்கு புதிய டிராக்டர் ஒன்றையும் அனுப்பிவைத்து உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

“சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ்வரராவின் குடும்பத்திற்கு டிராக்டரை அன்பளிப்பாக வழங்கி சிறந்த முயற்சியை எடுத்துள்ள சோனுஜியை தொடர்புகொண்டு பேசி பாராட்டினேன். இந்தக் குடும்பத்தின் நிலையை உணர்ந்து, இரண்டு மகள்களின் கல்விக்குப் பொறுப்பேற்று, அவர்களின் கனவு நனவாக உதவி செய்வேன்” என்று டிவிட்டரில் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஷ்வரராவ் மாடுகளைக் கொண்டு உழுவதற்கு போதுமான பண  வசதியில்லாமல், தன் இரு மகள்களையும்  பயன்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்து நெகிழ்ந்த நடிகர் சோனு சூட், அந்த குடும்பத்தினருக்கு நேற்று புதிய டிராக்டரை அனுப்பிவைத்து உதவினார்.

விவசாயியின் நிலையறிந்து சோனுசூட் செய்த உதவிக்கு சமூகவலைதளங்களில் நன்றிகளும் வாழ்த்தும் குவிந்துவருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com