திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி: சந்திரபாபு நாயுடு திடுக் புகார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருப்பதி கோயிலை தாரை வார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் எழுமலையான் கோயிலை தங்கள் வசம் கொண்டு செல் லும் மத்திய அரசின் சதித்திட்டம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திராவுக்கு சலுகைகள் வழங்கப்படும் என ஏழுமலையானைச் சாட்சியாக வைத்து மோடி உறுதி அளித்திருந்ததாகவும் ஆனால் அதிலிருந்து அவர் தவறி விட்டதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார். திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்புகளை அடுத்து இது திரும்பப் பெறப்பட்டது