இந்தியா
பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்... சண்டிகரும் அறிவிப்பு..!
பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்... சண்டிகரும் அறிவிப்பு..!
ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, மேற்குவங்கம், கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து சண்டிகர் மாநிலத்திலும் பட்டாசு வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று உள்ள சூழலில் பட்டாசு வெடித்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு மேலும் சிரமம் உண்டாகும் என்று ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், கர்நாடகா மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடைவிதித்தது. இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடித்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் முழுமையாக தடைவிதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.