புயல்புதியதலைமுறை
இந்தியா
திருவண்ணாமலை மகா தீபம் நாளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
ஃபெஞ்சல் புயல் ஒருசில மாவட்டங்களில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவண்ணாமலைப் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்பை அது விட்டு சென்று உள்ளது.
திருவண்ணாமலை மகா தீபம் அன்று கனமழைக்கு வாய்ப்பா?.. வானிலையாலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்..
ஃபெஞ்சல் புயல் ஒரு சில மாவட்டங்களில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவண்ணாமலைப் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்பை அது விட்டு சென்று உள்ளது. திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு ஏழுபேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வரும் 13ம் தேதி மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. ஆனால் வருகின்ற 13ம் தேதி அன்று திருவண்ணாமலையில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலையாளர்கள் எச்சரித்து உள்ளனர். அந்த மழையானது கனமழையாக இருக்குமா அல்லது லேசான மழையா, மிதமான மழையா என்பதை நாம் கூற முடியாது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.