ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு?

ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு?
ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர வாய்ப்பு?

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் ‌மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் சீரமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ரயில்வே கட்டணம் 20 சதவிகிதம் வரை உயரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு குறித்து விரிவான ஆலோசனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள யாதவ், சாலை போக்‌குவரத்து கட்டணத்திற்கு நிகராக ரயில் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com