இந்தியாவில் அமைதி, நல்லிணக்கத்துக்கு சவால்: அமெரிக்காவில் ராகுல் காந்தி

இந்தியாவில் அமைதி, நல்லிணக்கத்துக்கு சவால்: அமெரிக்காவில் ராகுல் காந்தி
இந்தியாவில் அமைதி, நல்லிணக்கத்துக்கு சவால்: அமெரிக்காவில் ராகுல் காந்தி

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அச்சம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவை சில சக்திகள் பிரித்தாள முயற்சிப்பதாகவும் இது மிகவும் ஆபத்தானது என்றும் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிலவும் இப்போக்கு வெளிநாடுகளில் நம் நாட்டின் புகழை குலைப்பதாகவும் ராகுல் தெரிவித்தார்.

நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, தொழிற்துறையில் சீனா சரியான தொலைநோக்குப் பார்வையுடன் அதிவேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியா முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொழில்துறையில் சீனாவைப் போன்ற பார்வை இந்தியாவுக்கு உள்ளதா? என்றும் அவர் வினவினார். இந்திய அரசியலில் தலைதூக்கியுள்ள பிரிவினைக் கருத்துகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com