\
yuzvendra chahal
yuzvendra chahalreuters

மதுவுக்கு அடிமையான நம்பர் 1 பவுலர்! மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை! மனவேதனையை பகிர்ந்த சஹால்!

தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான காலகட்டம் குறித்து மனம் திறந்துள்ளார் யுஸ்வேந்திர சஹால். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள் ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு அவரது அனுபவம் ஓர் உதாரணமாகியுள்ளது.
Published on: 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருக்கும் சஹால், மைதானத்தில் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகிறார். ஆனால், கிரிக்கெட் களத்திற்கு வெளியே அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் பலருக்கும் தெரியாதவை. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்திருக்கிறார் சஹால்.

இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் விளையாடத் தொடங்கிய சஹாலுக்கு, நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொண்டபோது மதுப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இந்தப் பழக்கம், விவாகரத்துக்குப் பிறகு தனது மனநிலை பாதிக்கப்பட்ட காலத்தில் அதிகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

yuzvendra chahal
yuzvendra chahalani

ஒரு கட்டத்தில், இந்தப் பழக்கம் தொடர்ந்தால் தான் மிகவும் நேசிக்கும் கிரிக்கெட் வாழ்க்கையே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த சஹால், அதிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளார். இதற்காக மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து 26 நாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ள அவர், தற்போது தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் மனநிலையைச் சமநிலையில் வைத்துக்கொள்வதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உடற்பயிற்சி மற்றும் மைதானப் பயிற்சிகளிலும் மீண்டும் முழுமையாகக் கவனம் செலுத்த முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டதும் தனக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சஹால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, அதன் தாக்கம் தனது கிரிக்கெட் ஆட்டத்திலும் எதிரொலித்ததாக அவர் கூறியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் மனநிலை சரியாக இல்லாததால், தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதற்குத் தயங்கியதாகவும், தனது நிலை அணியின் செயல்பாட்டைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக ஓய்வு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

yuzvendra chahal
yuzvendra chahalreuters

மன அழுத்தம் அதிகரித்த நிலையில், தனக்கு Panic Attacks ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது இதயத் துடிப்பு அதிகரிப்பதுடன், முகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, பேசுவதற்குக்கூட சிரமமாக இருந்ததாகக் கூறியுள்ளார். உதடுகள் இறுக்கமடைந்து ஒரு பக்கமாக இழுக்கப்படும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அப்போதுதான் பதற்றத்தின் தீவிரத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சூழலில், சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒவ்வொரு கருத்துக்கும் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்த சஹால், கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிதாகத் தொடங்க முடிவெடுத்துள்ளார். கிரிக்கெட்டில் மீண்டும் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சஹாலின் இந்த தனது கடினமான காலகட்டம் குறித்து அவர் பகிர்ந்துள்ள இந்த அனுபவங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com