முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்?

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்?

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்?
Published on

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதனால் முத்தலாக் தடைச் சட்டம் அவசரச் சட்டமாக இயற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாநிலங்களவையில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவைத் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com