இந்தியா
”பிரியங்கா காந்தியின் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படவில்லை”- மத்திய அரசு விளக்கம்
”பிரியங்கா காந்தியின் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படவில்லை”- மத்திய அரசு விளக்கம்
பிரியங்கா காந்தியுடைய குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கம், ஹேக் செய்யப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதன் மூலமாக மத்திய அரசு தங்களை உளவு பார்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கூறியிருந்த அவர், தங்களது தொலைபேசிகளை ஒட்டு கேட்பது - சமூக வலைதளங்களை கண்காணிப்பது போன்றவற்றைதான் மத்திய அரசு செய்வதாகவும்; வேறு எந்த ஒரு வேலையும் அவர்கள் செய்வது இல்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்புடைய செய்தி: எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது: பிரியங்கா காந்தி
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்களும் மத்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து ஹேக்கிங் உள்ளிட்ட விவகாரங்களை கையாளும் இந்திய கம்ப்யூட்டர் அவசர மேலாண்மைக்குழு விசாரணை நடந்தது. அதன் முதல்கட்ட விசாரணையில் பிரியங்கா காந்தியின் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் எதுவும் செய்யப்படவில்லை என தெரியவந்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.