முத்தலாக் முறையை தடை செய்ய சட்டம்: மத்திய அரசு முடிவு

முத்தலாக் முறையை தடை செய்ய சட்டம்: மத்திய அரசு முடிவு

முத்தலாக் முறையை தடை செய்ய சட்டம்: மத்திய அரசு முடிவு
Published on

முத்தலாக் நடைமுறைக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்தது. அந்தத் தீர்ப்பில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் இடைக்கால தடை விதித்தனர். அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வரைவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முத்தலாக்கிற்கு எதிராக சட்டவிதிகளை வகுக்க அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com