மத்திய பெட்ரோலியத் துறை
மத்திய பெட்ரோலியத் துறை Pt Web

’தண்ணீர் கேன்களில் பெட்ரோல் விற்பனை..’ - பொதுமக்களுக்கு பெட்ரோலியத் துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கியது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Published on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் உலகின் 40 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதன் அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிந்துவருகிறது. நாடு முழுவதும் LPG சமையல் எரிவாயுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், அடுத்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Crude Oil
Crude Oilcrude oil

இதன் காரணமாக, பெட்ரோல் பங்க்-களில் கடந்த 2, 3 நாட்களாக கூட்டம் அலைமோதி வருவதை காணமுடிகிறது. அதேசமயம், போதுமான பெட்ரோல் - டீசல் கையிருப்பில் இருப்பதாகவும், வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பெட்ரோல் நிறுவனங்கள் விளக்கமளித்திருந்த போதிலும், தண்ணீர் கேன்களிலும், வாட்டர் பாட்டில்களிலும் பொதுமக்கள் பெட்ரோல் வாங்குவது போன்ற காணொளிகள் வெளியாகின. பெட்ரோல் எளிதாக தீப்பற்றக்கூடிய பொருளாக இருப்பதால், பிளாஸ்டிக் பொருட்களில் வாங்கக்கூடாது என தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய பெட்ரோலியத் துறை
தொடர் தாக்குதல் | கருணைக்கு இடமில்லை.. போர் விதிகளை மீறும் அமெரிக்கா!

இந்த சூழலில், போதுமான அளவு பெட்ரோல் டீசல் கையிருப்பில் உள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலைத் திறந்த நிலையில் உள்ள கொள்கலன்களில் வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது என்பதால், பொதுமக்கள் அவ்வாறு பெட்ரோலைச் சேமிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெட்ரோல் பங்க்-ல் அலைமோதும் கூட்டம்
பெட்ரோல் பங்க்-ல் அலைமோதும் கூட்டம்Pt web

விதிமீறலில் ஈடுபட்ட அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விநியோகஸ்தர்களும் பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை
ஈரானின் ’மணிமகுடம்’ மீது தாக்குதல்.. ட்ரம்ப் வைத்த குறி? ’கார்க் தீவு’ ஏன் முக்கியம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com