\
Centre Govt moves two CoBRA battalions to Manipur
CoBRA battalionsx page

வன்முறைகளை கட்டுப்படுத்த முடிவு.. களமிறங்கிய மத்திய அரசு.. மணிப்பூருக்கு செல்லும் கோப்ரா படை!

சிஆர்பிஎஃப் படையின் ஒரு பிரிவான கோப்ரா படை பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுவாகும்.
Published on

வன்முறை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பமால் இருந்துவருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறையின் சிறப்பு கமாண்டோ படையான கோப்ரா படைப்பிரிவு மணிப்பூரில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

வன்முறை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பமால் இருந்துவருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறையின் சிறப்பு கமாண்டோ படையான கோப்ரா படைப்பிரிவு மணிப்பூரில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்களை ஒடுக்க கோப்ரா படையின் இரு குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பவுள்ளது. சிஆர்பிஎஃப் படையின் ஒரு பிரிவான கோப்ரா படை பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுவாகும். இக்குழு நக்ஸல் ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மணிப்பூருக்கும் அனுப்பப்பட உள்ளது.

Centre Govt moves two CoBRA battalions to Manipur
பதவியேற்ற புதிய அரசு.. அமைதி திரும்பாத மணிப்பூர்.. மீண்டும் வெடித்த வன்முறை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com